கோவையில் நடைபெற்ற யூனிவர்சல் ரோபோ லீக் போட்டி பள்ளி மாணவர்களின் ரோபோடிக்ஸ் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரோபோடிக் மற்றும் கணினிதொழில்நுட்பம் சார்ந்த மென்பொருள் கல்வியை வழங்கி வரும் ரோபோமேட்டிக், நிறுவனம் சார்பாக கோவையில் யூனிவர்சல் ரோபோ லீக் எனும் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் மற்றும் தொழில் நுட்ப திறன் போட்டி நடைபெற்றது..
தொடர்ந்து இரண்டாவது சீசனாக நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்..
ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில்,ஹேக்கத்தான்,புதுமையான திட்டங்கள் உருவாக்குதல்,என பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் ஜூனியர் பிரிவில் 253 அணிகளும், சீனியர் பிரிவில் 32 அணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற்றனர்…
போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன ரோபோமாட்டிக் நிறுவனத்தின் தலைவர் குமரேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில்,முதன்மை விருந்தினராக பாலக்காடு ஐ.ஐ.டி.பேராசிரியர் முனைவர் சாந்தகுமார் மோகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார் விழாவில் பேசிய அவர்,பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் சார்ந்த கல்வியின் தேவையையும் அதன் பலன்களையும் மாணவர்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தார்.