தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து 380 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டு மனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 380 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றிய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பஞ்சாபகேசன் பொது தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கவிதா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிலம் கதிர்வேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சண்முகசுந்தர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *