கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆரா 2026 அறிவியல் கண்காட்சி

மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியை சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி,தாளாளார் சுகுணா ஆகியோர் துவக்கி வைத்தனர்..

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பல்வேறு தொழில் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தி கவனம் ஈர்த்துள்ளனர்…

இளம் மாணவ கண்டுபிடிப்பாளர்களின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது..

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஆரா 2026 எனும் அறிவியல் கண்காட்சி சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது கல்லூரியின் டீன் ரம்யா சந்தோஷ் மற்றும் முதல்வர் கோவிந்தராஜுலு ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்காட்சியை சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் தாளாளர் சுகுணா ஆகியோர் துவக்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர்…

இதில் மாணவர்கள் குழுவாக தங்கள் படைப்பாற்றல் திறன்களை நிரூபிக்கும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களின் புதுமையான செயல் மாதிரிகள் மற்றும் யோசனைகளை காட்சிப்படுத்தினர்.

மாணவர்களின் அறிவியல் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் குழுப்பணியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட்ட சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் நாராயணசாமி கூறுகையில்,தொழில் துறை சார்ந்த நிஜ உலகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வெளிப்படுத்தி இருப்பதாகவும்,பிரதமர் மோடி கூறியதை போல மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்..

தொழில் நுட்பத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் பங்கு அதிகம் இருப்பதாக கூறிய அவர்,அதனை நிரூபிக்கும் வகையில் சுகுணா பாலிடெக்னிக் மாணவர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சி படுத்தி இருப்பதாக அவர் கூறினார்..

மூன்று நாட்கள். நடைபெற உள்ள ஆரா அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சியை கோவையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *