மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவத்தை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மண்டல உற்சவம் மார்ச் 12 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, முதல் நாளான்று கொடியேற்றம் நடைபெற்றது. கம்பத்தடி மண்டபத்தில் தங்கக்கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. உற்சவர் சன்னதியிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்ட பத்தில் எழுந்தருளினர்.

பின்னர், யாகசாலை பூஜை முடிந்து கொடியேற்றம் நடை பெற்றது. தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்று இரவு முதல் விநாயகர், சுப்பிரமணியர். முதல் மூவர், சந்திரசேகரர் புறப்பாடு நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து, பிப்.21 ம் தேதி காலை 8 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் சுற்றுக் கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு முதல் மார்ச் 2ம் தேதி வரை சித்திரை வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேஸ்வரர் சுவாமி திருவீதி உலா வந்து, பின்னர் கோயிலில் சேர்வர். மார்ச் 12ம் தேதி பிரதான கொடி இறக்கி கணக்கு வாசித்தலுடன் உற்சவம் நிறை வடையும். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *