புதுவை அரசு வேளாண், விவசாயிகள் நலத்துறை சார்பில் ஏ.எப்.டி. திடலில் 3 நாட்கள் நடந்த 33-வது மலர், காய், கனி கண்காட்சி நிறைவடைந்தது. நிறைவு விழாவுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை வகித்தார். அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:- புதுவை அரசு அறிவித்தபடி 11 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கியுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும். விவசாயிகள் மண்ணுக்கு ஏற்ப விளை பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். தோட்டக்கலை விவசாயிகளின் வருமா னத்தை பெருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். நான் விவசாய அமைச்சராக பொறுப்பே ற்றபோது புதுவையில் 30 ஆயிரம் ஹெக்டேர் நிலம் இருந்தது. தற்போது நகரின் வளர்ச்சி, தொழிற்சாலை களால் விளைநிலங்கள் குறைந்துவிட்டது. விளைநிலங்கள் குறைந்தால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது நமது கடமை. அதற்காக வீடுகளில் மாடி தோட்டம் அமைக்க துறை சார்பில் நிதி வழங்கப்ப டுகிறது.

புதுவையில் பால் உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியம். இதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும். கறவை மாடுகள் வாங்க அரசு மானியம் வழங்கி வருகிறது. படித்த இளைஞர்கள் மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும். வங்கிகளிடம் உதவி பெற்றுத்தரவும் அரசு தயாராக உள்ளது. புதுவை அரசு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. சட்டசபையில் அறிவித்தபடி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும். சுதேசி மில் பழமை மாறால் சுற்றுலா தலமாக மாற்ற விரைவில் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மலர் ராஜா பட்டம் கருவடிகுப்பம் மேத்தா தட்சிணாமூர்த்திக்கும், மலர் ராணி பட்டம் புதுவை ஜெயஸ்ரீபிரிதர்ஷினிக்கும் வழங்கப்பட்டது. காய்கனி ராஜா பட்டம் கீழ்சாத்த மங்கலத்தை சேர்ந்த புண்ணியக்கோடிக்கும், காய்கனி ராணி பட்டம் பூரணாங்குப்பம் செந்தாம ரைக்கும் வழங்கப்பட்டது. விழாவில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., வேளாண் இயக்குனர் பாலகாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *