பிப்ரவரி 19 நாமக்கல்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்ற வில்லை என்று, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவர் T.S. பிரபு ராஜா கூறியுள்ளார்*
நாமக்கல்லில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின்(NAAM) மாநிலத் தலைவர் T.S. பிரபு ராஜா செய்தியாளர்களை (19.02.2026) சந்தித்தார்.
அப்போது கூறிய அவர்,
கடந்த 2024-ம் ஆண்டு மத்திய அரசு விலை வீழ்ச்சி ஏற்பட்டபோது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்கான வரியை 30 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்று, அதன் அடிப்படையில் 22 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதனால் 5.5 சதவீதத்திலிருந்து 27.5% ஆக வரி நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடந்த 18 மாதங்களாக தென்னை விவசாயிகள் லாபகரமான விலையை பெற்று வருகின்றனர். இந்த நிலை தொடர வேண்டும்.
ஆனால் கடந்த 2025-ம் ஆண்டு, சமையல் எண்ணெய்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக, மத்திய அரசு, 22 சதவீதத்திலிருந்து இறக்குமதி வரியை 11% ஆக குறைத்து விட்டதை உயர்த்த வேண்டும்.
அதேபோல, கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து தேங்காய் விலை வீழ்ச்சி ஏற்படும்போது, அதற்கு மத்திய அரசு கூடுதல் விலை கொடுத்து வாங்குவதன் மூலம் தென்னை விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு பெரும் நடவடிக்கை எடுத்து வருவதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேசமயம், கொப்பரை தேங்காயை மீண்டும் தென் மாவட்டங்களில் விற்பனை செய்வதால் பெரும் நிறுவனங்களுக்கு போய் சேர்ந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கொப்பரையாக விற்காமல் எண்ணையாக பிழிந்து வட மாநிலங்களில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் என மத்திய அரசை நாம் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
மாநில அரசை பொருத்தவரை, தமிழகத்தில் கடந்த 5 வருடங்களாக தேங்காய் எண்ணெயை பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும் என பல கட்டங்களாக கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். அதனை ஏற்று பரிட்சார்த்த முறையில் டெல்டா மாவட்ட பகுதிகளில் நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதாக மாநில அரசு அறிவித்து ஒரு வருடம் ஆன பிறகும் ஒன்றும் செய்யவில்லை.
எனவே, தேங்காய் எண்ணெயை மாதந்தோறும் நியாய விலை கடைகளில் குடும்பக் ஒன்றுக்கு 2 லிட்டர் வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ தேங்காயும், பண்டிகை காலங்களில் 10 கிலோவும் வழங்க வேண்டும். கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு வலுவாக எங்கள் கோரிக்கையை வைக்கின்றோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களையே நாங்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஆதரிக்க உள்ளோம்.
கொரோனா பாதிப்பு காலத்தில் ஒருத்தன் தேங்காய் 52,000. ஆனால், 2021-ம் ஆண்டில் நான் ஒன்று 18,000 வரை குறைந்துவிட்டது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நாங்களே எங்கள் விலையை நிர்ணயம் செய்து கொள்வோம். சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மட்டும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
நாம் இயக்கத்தின் சார்பில் வருகின்ற 22 ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நாமக்கல் மாவட்டம், பிள்ளைகளத்தூர் கிராமத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் வெள்ளி விழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னை விவசாயிகள் பல்லாயிரக்கணக்கானூர் வருகை தர உள்ளனர் என்றும், தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவர் T.S. பிரபு ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு (NAAM) இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.