மன்னார்குடி
இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித் தலைவா் வ.மோகனச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , மாவட்ட வருவாய் அலுவலர் , உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மண்டல வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் இதில் பங்கேற்றனர்.
தேர்தல் நடைமுறைகள் மற்றும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கடந்த தேர்தல்களில் கூடுதல் கண்காணிப்பு வழங்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை தீவிரபடுத்த வேண்டும்.
வாக்கு சாவடி மையங்களில் பணியாற்றும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படு்ம் சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.