பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர்த் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் மஞ்சுளா தலமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கிளாடின் கிரேஸ் மெக்பர்லேன், விலங்கியல் விரிவுரையாளர் லோகேஸ்வரி முன்னிலை வகித்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியை பிரபாவதி வரவேற்றார். பேராசிரியர் வெற்றிவேல் நீர்ப் பாதுகாப்பும் எதிர்கால அவசியமும் என்னும் தலைப்பில் நோக்கவுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசியதாவது:- நீர் மேலாண்மை மிகவும் அவசியமாக இருந்து வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மத்திய அரசு அனைத்து கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் 100 சதவீத பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு நபர் 55லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவது அதிகபட்சமாக நிர்ணயித்துள்ளது. ஆனால் நமது பகுதிகளில் ஒரு நபர் 100லிட்டரில் இருந்து 200 லிட்டர் வரை செலவு செய்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

வீடுகள் மற்றும் தெருக்களில் பயன்படுத்தப்படும் குடிநீர் குழாயை மூடி வைக்கவேண்டும். சிக்கனமாக பயன்படுத்தி எதிர்காலத்தில் தண்ணீர் தட்டுபாடு இன்றி கிடைக்க அனைவரின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. விவசாயம் சார்ந்த தொழிலிலும் நவீன முறையை பயன்படுத்தி தண்ணீர் சேகரிக்க வேண்டும். நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் ரவி, வானவில் ஆனந்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனியன், அரவிந்தர் சொசைட்டி பொறுப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர். மாணவி அன்புமதி நீருக்கான உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் அருளரசன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *