செய்தியாளர் வெங்கடேசன்.
உலக தாய்மொழி நாள் உறுதிமொழி
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உலக தாய்மொழி நாள் (21.02.2026)முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கீழ்கண்ட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம், தேமதுர தமிழோசை உலகமெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம், இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத்தமிழ் மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன்,
என்று உறுதி மொழி ஏற்கப்பட்டது.
உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன்(CWC), ராணிப்பேட்டை உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கனகராஜ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி,நிர்வாக அலுவலர் நாகராஜன் (நிர்வாகம்) ,நிர்வாக அலுவலர் V பாரதி (கணக்கு) ,அதிகாரிகள் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.