உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஒதியஞ்சாலை திடல் என அழைக்கப்படும் அண்ணா திடல் கடந்த ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி நிதி உதவியுடன் விளையாட்டு மைதானம் அமைத்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள அண்ணா சாலை, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி, லப்போர்த் வீதி போன்ற வீதிகளில் நகராட்சி கட்டுப்பாட்டில் குபேர் பஜார், நேரு பஜார், என்ற பெயர்களில் கடைகளும் செயல்பட்டு வந்தது…. விளையாட்டு மைதானம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளும் பொழுது இந்த கடைகளை புதுச்சேரி நகராட்சி மூலம் புதிய கடைகள் கட்டித் தருவதாக கூறி கடைகளை காலி செய்யப்பட்டு புதிய கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது… தற்போது இரண்டு மாத காலமாக இப்பணிகள் ஏதும் நடைபெறாமல் அப்படியே உள்ளதால் அண்ணா திடல் சுற்றியுள்ள வியாபாரிகள் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி எம்எல்ஏவிடம் பலமுறை இது பற்றி புகார் தெரிவித்தனர்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் விளையாட்டு மைதானம் மற்றும் கடைகள் கட்டும் அதிகாரிகளிடம் பலமுறை இது பற்றி ஆலோசனை மற்றும் பல கட்ட ஆய்வுகள் நடத்தினார். மேலும் பணிகளை மேற்கொள்ளும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் மற்றும் நிர்வாகத்துக்குள் பல குழப்பங்கள் நீடித்து வந்ததால் பணிகள் மிகவும் காலதாமதமாக நடைபெறுகிறது என்று குபேர்பஜார், நேருபஜார், லப்பொர்த் வீதி பகுதிகளில் கடை நடத்தியவர்கள் கடைகள் கட்டும் பணிக்கான காலக்கெடு முடிந்த நிலையில் எங்களுக்கு இதுநாள் வரை கடைகள் ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக நேரு(எ)குப்புசாமி எம்எல்ஏவிடம் தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து இது பற்றி முறையிட்டனர்.


இதன் அடிப்படையில் அண்ணா திடலில் கட்டிட பணிகளை மேற்கொள்ளும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளை அழைத்து பணிகளை விரைவாக முடிக்கும்படியும், கடைகள் கட்டி அந்தந்த வியாபாரிகளிடம் கடைகளை ஒப்படைக்கும் படியும் முதல்வர் அவர்கள் உத்தரவிட்டார். சட்டப்பேரவை தலைவர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கர் பிரகாஷ்குமார் மற்றும் குபேர்பஜார், நேருபஜார், லப்போர்த் வீதி பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *