தென்காசியில் பஞ்சாயத்து தலைவரிடம் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் உட்பட 7 பேர் கைது

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவரிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் உட்பட 7 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கொ.சந்திரசேகரன் இவர் தற்போது தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியிலுள்ள திருநகரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இவரது வீட்டிற்குள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு மர்ம ஆசாமிகள் சிலர் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததாகவும், அப்பொழுது அவரது மனைவி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது ஆத்திரத்தில் அந்த நபர்கள் தாங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சந்திரசேகரை காயப்படுத்தி சென்று விட்டதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை தென்காசி காவல் நிலையத்தில் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கிய போது, கொள்ளை அடிக்க வந்ததாக கூறப்படும் நபர்கள் சந்திரசேகரின் செல்போனை எடுத்துச் சென்றதும், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு பேக்கை பதட்டத்தில் அங்கே விட்டு சென்றதும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, அவர்கள் விட்டு சென்ற பேக்கை எடுத்து போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் கோயம்புத்தூர் பகுதி சேர்ந்த நபர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என சந்திரசேகரனின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்த போது, அவர்கள் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.உடனடியாக போலீசார் அவர்களை , பின் தொடர்ந்து சென்று அவர்களை கைது செய்து
அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கூலிப்படையினர் என்பதும், அவர்களை தென்காசி பகுதியை சேர்ந்த இரண்டு பேர் இதுபோன்று செய்யச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, தென்காசி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் கண்ணன் என்ற இளநீர் கண்ணன் மற்றும் சக்திமாரி ஆகிய இரு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது திமுக ஊராட்சி தலைவரான சந்திரசேகரன் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசும் ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக கூறி சந்திரசேகரனிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்ட முடிவு செய்ததாகவும், அதன்படி, அந்த நபர்கள் இங்கு வந்து வீடியோ மற்றும் ஆடியோக்கள் உள்ளதாக கூறி சந்திரசேகரனை மிரட்டிய நிலையில், அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரச்சனை ஏற்படவே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.

இதில், தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த முத்துக் கருப்பன் மகன் மதன் (வயது 20), ராமநாதபுரம் கமுதியைச் சேர்ந்த மாரி மகன் சக்தி வேல் (வயது22), கோவை வட வள்ளியைச் சேர்ந்த ராஜா முகமது மகன் ரிஸ்வான் கான் (வயது 22), கோவை புவ னேஸ்வரி நகரை சேர்ந்த போத்திராஜ் (வயது 30), தென் காசி மலையான் தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்தி மாரி (வயது 46), இடை கால் பாலமார்த்தாண்ட புரத்தை சேர்ந்த திருமலை மகன் கண்ணன், திருச் செங்கோடு சுப்பிரமணி யன் மகன் அருள் ஆகாஷ் (வயது 34) ஆகிய 7 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் கண்ணன் என்ற இளநீர் கண்ணன் (வயது 40) ஆகிய 7 பேரையும் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *