கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கதொகை வழங்கும் நிகழ்சியும், தொண்டுநிறுவனங்களை பாரட்டி ஊக்கதொகை மற்றும் ஏழை எளியோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா கேத்து ரெட்டிப்பட்டியில் நடைபெற்றது.
நிகழ்சிக்கு லட்சுமியம்மாள், நஞ்சப்பகவுண்டர் அரக்கட்டளை நிறுவனர் பரமசிவம் தலைமை தாங்கினார் சிவசங்கரி குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.
நிகழ்சியில் ஐம்பதுக்க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கேத்துரெட்டிப்பட்டிஅரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து 100% தேர்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் வரியாக ஊக்க தொகை வழங்கப்பட்டது. முதல் இரண்டு இடம்பிடித்த மாணவிகளுக்கு தலா ஐம்பது ஆயிரம் வழங்கப்பட்டது.
நூறு மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூபாய் இருபத்தி ஐந்து ஆயிரம், நானூற்றுக்கு மேல் பெற்ற மாணர்களுக்கு தலா இருபத்தி ஐந்தாயிரம் வழங்கப்பட்டது.
மற்றும் மதிப்பெண் அடிப்படையில் ஊக்கதொகையும், பத்தா வகுப்பில் படித்த அனைவருக்கும் ரூபாய் ஐந்து ஆயிரம் ஊக்கதொகையும் வழங்கப்பட்டது.
கல்லூரி படிக்கும் ஒரு மாணவனுக்கு மூன்று ஆண்டு படிப்புக்கான முழுதொகையும்,
மூன்று ஏழை குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஐந்து ஆயிரம், தொடர்ந்து அவர்களின் குடும்பத்திற்க்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம், மருத்துவ செலவுக்கு உதவி, தன்னார்வ தொண்டுநிறுவனங்களுக்கு ஊக்கதொகை, என லட்சம் பத்து லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டது.