கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கிணங்க துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகவேல் மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கே.சுகுமார் வழிகாட்டுதலின் படி தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் கே.எம்.குஞ்சாலி தலைமையில் இணைச்செயலாளர் பாரதி, நகரச்செயலாளர் நெல்லை செல்வன் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

வால்பாறை ஜே.ஜே.ஹோட்டல் முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *