தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் இயங்கி வரும் சிஎஸ்ஐ ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவிகள் முறையாக படித்து தேர்ச்சி பெற்று வேலை கிடைக்காததால் பயிற்சி பள்ளியை இரவு நேரத்தில் முற்றுகை பரபரப்பு.!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சி எஸ் ஐ காம்பவுண்டுக்குள் உள்ள சிஎஸ்ஐ ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளி 1967 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த செவிலியர் பயிற்சி பள்ளிகள் 1967 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை படித்த அனைத்து மாணவிகளுக்கும் அரசு வேலை வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஏ என் எம் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. தற்போது செவிலியர் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு தமிழக அரசு வேலை வழங்கி வருவதாக மாணவிகள் சார்பில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கும் வேலை வழங்குவதற்கு கவுன்சிலிங் நடைபெறுவதற்கு அழைப்பு எடுக்கவில்லை என வலியுறுத்தி இந்த கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த கல்லூரி நிர்வாக முதல்வர் கிறிஸ்டி மேகலா பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் எம் பி கனிமொழி சந்தித்துள்ளோம் இன்னும் பல அதிகாரிகள் தொடர்பு கொண்டு உள்ளோம் விரைவில் உங்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மாணவிகள் முறையாக புகார் கூறுங்கள் நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுத்தாததால் நேற்று காலை 11 மணியளவில் செவிலியர் பயிற்சி பள்ளியை முற்றுகையிட முடிவு செய்து பள்ளியில் காத்திருந்தனர். இரவு நேரமானதால் மாணவிகள் தொடர்ந்து செவிலியர் கல்லூரி நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கிடைக்க உறுதி செய்யும் வரை கல்லூரி நிர்வாகத்தை விட்டு வெளியில் செல்ல மாட்டோம் என கூறினர். தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் போலீசார் மற்றும் மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் படித்த மாணவர்கள் இது போன்று நடந்து கொள்வது நியாயம் இல்லை எழுத்துப்பூர்வமாக எனக்கு புகார் கொடுங்கள் அந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தை நான் வரவழைத்து பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என தெரிவித்தார். இருப்பினும் மாணவிகள் கலைந்து செல்லாததால் போலீசார் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறுமாறு கூறியதை தொடர்ந்து மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்தை விட்டு வெளியேறினர். இதனால் இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.