கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி கால்பந்து மைதானம் பல்வேறு சாதனையாளர்களை பல ஆண்டுகாலமாக உருவாக்கி வந்த நிலையில் தற்போது பல மாதங்களாக அந்த மைதானம் சீரமைக்கப்படாமல் இருந்து வருவதால் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருவதாகவும் இளைஞர்களின் பாதுகாப்பையும் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு மைதானத்தை சீரமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் கால்பந்து சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தாகவும் எனவே நகராட்சி மைதானத்தை காலதாமதமின்றி சீரமைக்க வேண்டி கால்பந்து சங்கத்தினர் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
24.02.2026

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *