மன்னார்குடி., பிப் 25
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி விவசாயிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எல்லாம் கடன்களை தள்ளுபடி செய்வோம் என 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது.
இதுவரையிலும் அதனை வெளியிடுவதற்கு எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை . கல்வி கடனையும் இதுவரையிலும் ரத்து செய்யவில்லை , இலவச மின்சாரங்களும் விவசாயத்திற்கு அதிகம் வழங்கப்படவில்லை . ரூ 3500 பல மாநிலங்களில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு விலை நிர்ணயம் செய்து வழங்குகிறார்கள்.
தமிழ்நாடு அரசு 2021லிலேயே நெல்லின் விலையை உயர்த்துவோம் என்று சொல்லி இதுவரைக்கும் நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை .
ஒட்டு மொத்தமாக விவசாயிகளின் நலன்களை புறக்கணிக்கிற விதமாக விவசாயிகளின் முகவரியையே அழிக்கக்கூடிய அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்திருக்கிறது மக்களை ஏமாற்றுகிற திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் அறிவிக்கிறார்கள்.
ஆனால் இதுவரையிலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து இந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை . திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியை திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தையும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தையும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் ஓஎன்ஜிசிக்கு எதிராக தொடர் போராட்டத்தை போராட்டம் நடத்திய அந்த பந்தலில் இருந்து தான் இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார்.
அந்தப் பிரச்சாரத்தை தொடங்கிய அந்த இடத்திலேயே அறிவித்தார். காவிரி டெல்டாவில் முழுமையாக விவசாயிகள் நிலங்கள் பாதுகாக்கப்படும் ஓஎன்ஜிசி வெளியேற்றப்படும் ஓஎன்ஜிசி ஆல் ஏற்பட்டிருக்கின்ற பேரழிவு குறித்து உடனடியாக ஒரு குழுவை நியமித்து அந்த குழு தருகின்ற அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்.
ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு சுல்தான் இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழுவினரை அறிக்கையை உடனடியாக இன்று வரையிலும் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு அதற்கான எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தற்போது ஓஎன்ஜிசியில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள், சங்கத் தலைவர்கள் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஓஎன்ஜிசி யில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் நிலக்கரி எடுப்பதற்கு அனுமதி தருவதாக உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.
எனவே திமுக சட்டமன்றத் தேர்தல் முடிகின்ற வரையிலும் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டங்களை கைவிட வேண்டும் என்று திமுக அரசு வலியுறுத்தி வருகிறார்கள் இதுகுறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
எனவே விவசாயம் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாதுகாக்க வேண்டும் சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 3500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மார்ச் 3ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
இது ஒரு எச்சரிக்கை போராட்டம் அந்த போராட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் விவசாயிகள் யாரை ஆதரிக்க வேண்டும் யாரை புறக்கணிக்க வேண்டும் என்கிற அறிவிப்புகளை எல்லாம் வெளியிட இருக்கிறோம் என்றார்.