தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் பகுதியில் இனாம் நிலம் பிரச்சனை குறித்து துணை முதல்வருக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால் இன்று குண்டடம் பகுதியில் வருகை தந்த அமைச்சர்களுக்கு விவசாயிகள் கருப்புக்கொடி காட்டி முயன்றனர் அப்பொழுது விவசாயிகள் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்த பெல்லம்பட்டி விவசாயிகள் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது இந்து அறநிலைத்துறை சார்பில் விவசாய நிலங்களை இனாம் நிலங்கள் என வகைப்படுத்தி தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் நிலங்களை இந்து அறநிலைத்துறை கையகப்படுத்தி வருவதால் அதனை கண்டித்து பெல்லம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தபோது மனுக்களை கொடுத்து அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் அந்த கோரிக்கைகளை நிராகரித்து இந்து அறநிலையத்துறை நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர் அதனை தொடர்ந்து விவசாயிகள் மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அவர்களிடம் நேரில் சென்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்களுக்கு இந்த தமிழக அரசு ஆனது செவி சாய்க்கவில்லை எனக் கூறி இன்று மாலை குண்டடம் அடுத்த ஈஸ்வரி செட்டிபாளையத்தில் இலவச பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி செய்தித்துறை அமைச்சர் முத்தூர் சாமிநாதன். மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் இள பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டுள்ள நிலையில் ஈஸ்வர செட்டிபாளையம் அருகில் உள்ள பெல்லம்பட்டியில் இருந்து விவசாயிகள் அவர்களுக்கு கருப்பு கொடி காட்ட வருவதைத் தொடர்ந்து உடனடியாக குண்டடம் போலீசார் அவர்களை கைது செய்ய சென்றனர் அப்போது விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களுடைய வாழ்வாதாரத்தை நிலைகுலை செய்ய உள்ள இந்த ஜீரோ பர்சன்டேஜ் இனாம் நிலையை உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் இல்லையெனில் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிப்போம் என தெரிவித்தனர் பிறகு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை நிராகரிப்போம் உடனடியாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து எங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்கிருந்த விவசாயிகளை அங்கிருந்து கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் துணை முதல்வர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவளுக்கு மனு கொடுத்தும் இனாம் நலத்தை எங்களுக்கு ஒப்படைக்காமல் கோயில் நிலம் என்று கோரி அபகரித்து வருகிறார்கள் உடனே அதை ரத்து செய்து விவசாயிகளுக்கு அந்த நிலத்தை பட்டா அளிக்குமாறு கேட்டும் தராததால் தொடர்ந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார் மேலும் வரும் தேர்தலில் வாக்கு கேட்டு யார் வந்தாலும் கருப்புக் கொடி காட்டி எங்கள் ஏரியாவுக்கு வராமல் தடுப்போம் என்றும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *