தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

கட்டிட வேலைக்கு சென்ற டாட்டா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அரிசி கடைக்குள் மோதி விபத்து 5 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ரங்கம்பாளையம் பிரிவு என்ற பகுதியில் தாராபுரத்தில் இருந்து கட்டிட வேலைக்கு செல்வதற்காக டாட்டா ஏஸ் வாகனத்தில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு டாட்டா எஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது.

இதில் அந்த டாட்டா ஏஸ் வாகனத்தை வீராட்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் வயது 50 என்பவர் ஓட்டிச் சென்றார். பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரங்கம்பாளையம் பிரிவு அருகே சாலையில் சென்றபோது டாட்டா ஏஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இருந்த அரிசி கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. இந்த விபத்தில் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டிய வீராட்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் கன்னியப்பன், கன்னியப்பன் மனைவி சத்யா, காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கலா, கனியூரை சேர்ந்த கண்ணியம்மாள், தளவாய் பட்டினம் பகுதியைச் சேர்ந்த செல்வி, தாராபுரம் பகுதியைச் சேர்ந்த வஞ்சியம்மாள் வஞ்சியம்மாளின் மகள் சாவித்திரி உள்ளிட்ட 6 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 6 நபர்களும் தனியார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து படுகாயத்திற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் இச்சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் காங்கிரீட் வேலைக்காக சென்ற போது நடைபெற்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *