தூத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 46 மாதங்களாக நடைபெற்று வரும் மாமன்ற கூட்டங்களில் பல்வேறு வார்டு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டிருந்தாலும், 2026 பிப்ரவரி மாத மாமன்ற கூட்டத்தில் முன்வந்த ஒர் தீர்மானம் சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட டி எம் பி காலனி சாலையில் டோபிகானா வணிக வளாகம் உள்ளது. இங்கு, தரைத்தளத்தில், மாவட்ட மேலாளர் வழியாக டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை செயல்பட 500 சதுரடி பரப்பளவில் மாத வாடகை ரூ.12,000 + GST என நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

குறிப்பாக, அதே வளாகத்தில் உள்ள G3, G4, G5 கடைகளின் ஆரம்ப மாத வாடகை ரூ.13,250 + 18% GST (மொத்தம் ரூ.15,635) என இருந்த நிலையில், குறைந்த தொகையில் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து கேள்விகள் எழுந்தன. மேலும், 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும் வணிக வளாகம் முழுமையாக செயல்பாட்டிற்கு வராத சூழ்நிலையில், இந்த ஒதுக்கீடு விவகாரம் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

இதில், மாமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி மற்றும் ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, மாமன்ற உறுப்பினர் கந்தசாமி “தயவு செய்து அனுமதிக்க வேண்டாம்” காலில் விழுந்து கேட்கிறேன் என்று உருக்கமாக கேட்டுக்கொண்டது கூட்டத்தில் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.

இதற்கு பதிலளித்த ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சியில் எத்தனை கடைகள் உள்ளன என்பது எனக்கு தெரியாது. அவை குடியிருப்பு பகுதியில் உள்ளனவா, எங்கு அமைந்துள்ளன என்பது பற்றியும் தெரியாது. அவர்கள் கடை கேட்டு வருகிறார்கள். அந்தக் கடையில் டாஸ்மாக் நடத்தக்கூடாது என்று என்னால் கூற முடியாது என்றார்…

அந்த செய்தி காதில் விழுந்தவுடன் கந்தசாமி ஒரு கணமும் தாமதிக்காமல் அறையை விட்டு விரைவாக வெளியேறினார். சில நிமிடங்கள் கழித்து அவர் மாவட்டக் கூட்ட அரங்கில் தோன்றினார். அவரது திடீர் வருகை அங்கு இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தீர்மானம் அரசியல் சர்ச்சையாக நீடிக்குமா? மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *