தொட்டிச்சி மலையை 5 கல்குவாரிகளுக்கு ஏலம் விடுவதற்கு முயற்சியை கண்டித்து கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே பச்சாபாளையம் கிராமத்தில் தொட்டிச்சி மலையை கனிமவளத் துறை சார்பில் ஏலம் விடுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. அந்த மழையில் 5 கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் அந்த மலையை தரிசு நிலம் என சான்று வழங்கி கனிமவளத்துறை சார்பில் ஏலம் விடுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.
பச்சாபாளையம் கிராமத்தில் 100 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு இங்கு உள்ள பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயி மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை நம்பி வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். இங்கு உள்ள தொட்டிச்சி மழையை ஐந்து கல்குவாரி ஏலம் விடுவதற்காக கனிமவள துறையும் வருவாய்த் துறையும் முயற்சி எடுத்து அந்த மலை குன்றை தரிசு நிலமென வகைப்பாடு செய்து மாற்றி கனிம வளத்துறை மூலம் ஏலம் விடுவதற்கு ஆன்லைனில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஓ அலுவலகத்தில் இந்து முன்னணி மற்றும் பச்சாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு வந்து கல் குவாரி அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு கல் குவாரி அமைந்தால் என்னென்ன பாதிப்பு வரும் என்பதை ஆய்வு செய்து சென்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் பச்சாபாளையம் கிராம பொதுமக்களுடன் இணைந்து இந்து முன்னணி சார்பிலும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் தொட்டிச்சி மலையில் 5 கல்குவாரிகள் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் கோட்டைச் செயலாளர் கோவிந்தராஜ், அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பச்சாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி நிர்வாகிகள் உடன் இணைந்து தொடர்ந்து வருவாய் துறையினர் கல்குவாரி அமைவதற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட நிதி குழு துணை தலைவர் கோனேரிப்பட்டி பாலு,
இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் தவமணி,பாலு மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.