வடலூர் மாருதி நகரை சேர்ந்த கனகசபை மகன் ஞானமணி (33)வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் இ சேவை மையம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு
வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து நேற்று காலை வழக்கம் போல கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் பூட்டை உடைக்க முடியாமால் மர்ம நபர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர்.இதையடுத்து கடலூர் செல்லும் சாலையில் தண்டபாணி என்பவரின் மளிகை கடை பூட்டை அடித்து உடைக்க முற்பட்டு உடைக்க முடியாமல் அருகில் இருந்த கிஷோர் என்பவரின் செல்போன் கடையில் திருட முயற்சி செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிசிடிவியில் முகம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு கேமராவில் ஸ்பீரோ அடித்து பூட்டை உடைக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.