தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே கோவில் நிலத்தை மனை பரிவுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மனு அளித்த கிராம மக்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை குண்டடம் அருகே உள்ள
நந்தவனம்பாளையம் கிராமத்தில் வெற்றி விநாயகர் மற்றும் தூண்டி கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது ஊர் பொதுமக்கள் விசேஷ நாட்களில் பூஜைகள் நடத்துவது வழக்கம் விசேஷ நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

கோவிலுக்குச் சொந்தமான இடத்தை சில தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை சார்பில் அளவீடு செய்யப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு முயற்சி நடப்பதாக அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் பக்கத்தில் பல இடங்கள் இருக்கிறது அதனை அரசு கண்டறிந்து கொடுக்க வேண்டும் இதை காலங்காலமாக வழிபட்டு வரும் வேளையில் இதை எங்களுக்கே தர வேண்டும் என்று கூறினார்கள் இதனைத் தொடர்ந்து நந்தவனம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோவில் நிலத்தை மனை நிலமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *