காரைக்காலில் செயல்பட்டு வரும் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் மகளிர் நல இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி காரைக்கால் லெ ராயல் பேலஸ் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நசீம் மற்றும் காரைக்கால் முதன்மை கல்வி அலுவலர் விஜயமோகனா அவர்கள் கலந்து கொண்டனர் சமூக சேவை, கல்வி, மருத்துவம், தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 30 தகுதியான பெண்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜே. ஜெயபாரதி, தலைவர் திருமுருகன், துணைத் தலைவர் டாக்டர் ஜோதி @ புஷ்பவல்லி, செயலாளர் திரு சிவகுமார், இணைச் செயலாளர்கள் எம். அனிதா மற்றும் ஏ. பிரியதர்ஷினி ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.