புதுச்சேரி அரசின் திட்டத்தின் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவி திட்டத்தின் கீழ், உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை நிதி உதவி வழங்கும் ஆணையை உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்.
இந்த உதவித்தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.