புதுச்சேரி செய்தியாளர் ராஜாராம் குமார்
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோவிலில் நடைபெற்று வரும் எட்டாம் நாள் திருவிழா மதியம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுவாமிக்கு தீவிர ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வில்லியனூர் சிந்து கேபிள் நிறுவனத்தை சேர்ந்த சரவணன் மற்றும் சந்தியா குடும்பத்தினர் சார்பில், அம்மன் கோவில் வாசலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுச் சென்றனர்.