கோவையை சேர்ந்த ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்ந்த உறுப்பனர்கள் பங்கேற்பு
தொழில் முனைவோராக உலக அளவில் இந்திய பெண் தொழில் முனைவர்கள் ஜொலித்து வருவதாக கோவை திரும்பிய பெண்கள் பெருமிதம்
டெல்லியில் ABWOA – All Business Women’s Association பெண்கள் சங்கத்தின் 6-வது ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தினம் கடந்த மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்றது..
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்ட இதில்,கோவையில் இருந்து , ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் ராதா பெல்லன், செயலாளர் இந்திரா, பொருளாளர் சுமிதா மற்றும் கரூர் மாவட்ட தலைவர் விதுபாலா உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவன் மற்றும் இந்திய பாராளுமன்றம் உள்ளிட்ட முக்கிய தேசிய இடங்களை பார்வையிட்டு கோவை திரும்பிய பெண் தொழில் முனைவோர் கூறுகையில்,பெண்களின் தொழில் முனைவு, தலைமைத்திறன் மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகவும்,பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு சமூக மற்றும் தொழில் சார்ந்த திட்டங்களை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர்..
மேலும் தற்போது உலக அளவில் இந்திய பெண்கள் தொழில் முனைவோராக ஜொலித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தனர்…