திருவையாறு அருகே புனவாசல் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (49) இவர் விளாங்குடி அருகே தனது கோழிப்பண்ணையில் 5 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அங்கு செட்டில் கட்டி வைத்திருந்த 5 ஆடுகளையும் கடந்த 5ம் தேதி மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து திருவையாறு போலீசில் செந்தில்குமார் புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுகுறித்து விசாரிக்க வந்த போலீசார் அருகில் இருந்த பேக்கரியில் உள்ள வீடியோ புட்டேஜை எடுப்பதற்காக செந்தில்குமாருடன் இருந்த விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பாலா என்பவரிடம் பென்டிரைவ் வாங்கி வர தெரிவித்துள்ளனர். அவர் வாங்க செல்லும் பொழுது மர்ம நபர்கள் அவரை வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் செந்தில்குமார் தலைமையில் திருவையாறு – திருமானூர் நெடுஞ்சாலை விளாங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை டிஎஸ்பி சோமசுந்தரம் திருவையாறு எஸ்ஐ மீனா மற்ற போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.