தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி கீழச்சுரண்டையை சேர்ந்தவர் மா. ஜெயக்குமார்(53) இவர் சுரண்டை ஐஒபி வங்கியில் பணிபுரிந்து வருகிறார் இவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில் சுரண்டை சாம்பவர்வடகரை ரோட்டில் உள்ள பொட்டல் மாடசாமி கோவிலுக்கு வழக்கம் போல சாமி கும்பிட்டு விட்டு வந்தபோது தங்க பொருள் ஒன்று கிடப்பதை பார்த்து எடுத்துள்ளார்
அதனை பார்த்த போது சுமார் 3 கிராம் மதிப்புள்ள தங்க தாலி டாலர் என்பதை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தொலைத்தவர்கள் குறித்து விசாரித்து வந்துள்ளார் தொடர்ந்து சுரண்டை காவல் நிலையத்தில் அவரும் அவரது சகோதரர் மா. முத்துக்குமார் ஆகியோர் எஸ்ஐ வி. ராஜாவிடம் ஒப்படைத்தனர் தமிழரின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கினை வகிக்கும் தாலியை உரியவரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்த சகோதரர்களை போலீசார் பாராட்டினர், தாலியை தொலைத்தவர்கள் உரிய அடையாளத்தை சொல்லி பெற்றுச் செல்ல வேண்டும் என எஸ்ஐ ராஜா தெரிவித்தார்
உடன் எஸ்ஐ சாமுவேல், தனிப்பிரிவு காவலர் குமார், சமூக ஆர்வலர் அருணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்