தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
இலவசம் வீட்டுமனை பாட்டா கேட்டு நந்தவனம் பாளையம் கிராம மக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாக்கு உட்பட்ட நந்தவனம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டு வேருவடாம்பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஃபர்ஸ்ட் வருகின்றன இவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினருக்கு மனு கொடுத்தும் பத்து ஆண்டுகளாக எந்தவித இலவச வீட்டு மனை பட்டா தராதால் இன்று ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
இதில் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குண்டடம் காளிமுத்து அருந்ததிய மக்களுக்கு இலவச பட்டா கேட்டு பத்து ஆண்டுகளாக போராடியும் இதுவரை பட்டா தராததால் இன்று அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் தொடர்ந்து பட்டா தரவில்லை என்றால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.