காலையிலேயே பெட்ரோல் பங்கிற்கு படையெடுத்து வாகனங்களிலும் கண்களிலும் பெட்ரோல் நிரப்பி செல்லும் பொதுமக்கள்.
அமெரிக்க – ஈரான் போர் காரணமாக இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் – மேலும் அதன் விலையும் உயரும் என வதந்தி பரவியதால் நேற்று இரவு முதல் பெட்ரோல் பங்கில் பொதுமக்கள் படையெடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்களிலும் கேன்களிலும் பெட்ரோலை வாங்கி செல்கின்றனர். இதைப்போல் இன்று காலை முதல் விளார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிலும் குவிந்த பொதுமக்கள் தங்களது வாகனங்களிலும் கேன்களிலும் பெட்ரோல் டீசலை நிரப்பிச் செல்கின்றனர்.