கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது.
பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த ஆண்டும் நீர் மோர் பந்தல்களை இந்நிறுவனம் கோவை நகரில் பிரதான பகுதிகளில் அமைத்துள்ளது.
தினசரி பயணிகள், தொழிலாளர்கள்,மற்றும் பாதசாரிகள் பயன்பெறும் வகையில், கோவையின் முக்கிய இடங்களில் இந்த நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன..
முன்னதாக ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்கம் முன்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இணைந்து இந்த நீர் மோர் பந்தல்களைத் திறந்து வைத்தனர்.
இதே போல மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, தடாகம் சாலை உயர்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் மற்றும் காந்திபார்க் பேருந்து நிலையம் என பொதுப் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளான மொத்தம் 9 இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, காந்திபுரம் பகுதியில் நடமாடும் வாகனம் மூலமும் நீர்மோர் வழங்கப்படுகிறது..
இந்தச் சேவை அடுத்த 90 நாட்களுக்கு, தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும் என ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார் திபர்வால் கூறினார்..
தொடர்ந்து அவர், கூறுகையில், சுத்தமான நீர் மோரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதுடன், தாகமும் தீருகிறது. நிலையான நீர்மோர் பந்தல்கள் மட்டுமின்றி, தேவைப்படும் இடங்களுக்குச் சென்று இந்த சேவையினை வழங்கிட நடமாடும் நீர்மோர் பந்தல்களையும் செயல்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நீர்மோர் பந்தலும் முறையாகக் கண்காணிக்கப்படுகிறது. நீர்மோர் விநியோகிக்கப்படும் இடங்களில் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பராமரிக்கத் தனிப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்தச் சேவையை ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடதக்கது..