நாகப்பட்டினம்,ஜூன்.7-
சியாத்தமங்கை – சேஷமூலை சாலையில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தெருவிளக்கு வசதி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை, கோவில் சியாத்தமங்கை, சேஷமூலை, மானாம்பேட்டை, தென்பிடாகை பகுதிகளில் குமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் சியாத்தமங்கை -சேஷமூலை இடையே உள்ள மெயின் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் இரவு நேரங்களில் தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சென்றுவர அச்சப்படுகின்றனர். மேலும் இருபுறமும் வயல்வெளிகள் இருப்பதால் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இரவு நேரங்களில் சாலையில் ஊடுருவி நடந்து செல்பவர்களை கடிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் அச்சம் இருப்பதால் இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் சென்று வர மிகுந்த அச்சம் அடைகின்றனர்.


நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை கொண்டு சியாத்தமங்கை – சேஷமூலை சாலையில் தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *