பட்டுக்கோட்டை அருகே பள்ளியை மூடப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியில்புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு கிராம மக்கள் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செம்பாளூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளியில் .அதிக அளவில் மாணவ மாணவிகள் படித்து வந்த நிலையில் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமாக நிலையில் இருந்ததை அடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளி மற்றும் அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தனர்
இந்நிலையில் மிகவும் மோசமான இருந்த பள்ளி கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டு அங்கு படித்து வரும் மாணவ மாணவிகள் அருகில் ஒரு கூடாதரத்தில் படித்து வரும் சூழலில் அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலர் சதீஷ் குமார் முயற்சி எடுத்து தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறை என அனைவருக்கும்
மனுக்கள் வழங்கி நீண்ட போராட்டத்திற்கு பிறகு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு நான்கு
ஆண்டுகள் கழித்து புது கட்டிடம் கட்டி பள்ளி திறக்கப்பட்டதால் கிராம மக்கள் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்: