புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுற்றுலா வளர்ச்சி சம்பந்தமான இன்றைய கூட்டத்தில் முதல்வர் பொங்கியெழுந்து நான் சொல்வது எதுவும் நடக்கவில்லை, அனைத்து கோப்புகளும் தேங்கி நிற்கிறது. வளர்ச்சி பாதையில் புதுச்சேரி செல்லவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன்பு மாநில அந்தஸ்து பெறவில்லையென்றால், புதுச்சேரியை காப்பாற்றவே முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருமண விழாவில் தளபதியார் இந்த அரசை நாகரீகமாக விமர்சனம் செய்து பேசியதை குறையாக, அலட்சியமாக ஆளுநர் கூறியுள்ளார். விமான நிலைய விரிவாக்கத்திற்கு 300 ஏக்கர் நிலத்தை இலவசமாக தாருங்கள் என கேட்கிறார்.
2017ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத்சிங் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்துங்கள் பணம் தருகின்றேன் என்று கூறினார். ஆனால் இதுவரை தரவில்லை. மேலும் முதலில் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 47 ஏக்கர் நிலம் தமிழகத்தில் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது, பின்னர் 273 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக உயர்த்தி முடிவு செய்தனர். ஆனால் நிலத்தை கையகப்படுத்த முதல் கட்ட நடவடிக்கையை கூட இதுவரை தொடங்கவில்லை.
விமான நிலையத்திற்கு நிலம் கேட்டு இதுவரை இந்த அரசு ஒரு கோப்பு கூட அனுப்பவில்லை. முதல்வர் மாநாட்டில் சந்தித்து பேசியுள்ளேன் என்று ஆளுநர் கூறுகின்றார். தமிழக விவசாயிகள் புதுச்சேரியில் நிலத்தை கையகப்படுத்தும்போது என்ன விலை தருகின்றீர்களோ, அதே விலையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
நான் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து மூடப்பட்டுள்ள இந்தெந்த மில்களை திறந்துள்ளேன், நான் வந்தபிறகு எந்த கார்ப்ரேஷனும் மூடவில்லை என்று கூற முடியுமா? கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்தால் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை தர முடியும். திறந்தாரா? அதிகாரம் உள்ளது என்ற ஒரு காரணத்திற்காக எதையாவது சொல்லிவிட்டு போக கூடாது. மக்களுக்கு ஏதேனும் செய்துவிட்டு கூறுங்கள். பல நூறு கோடி செலவு செய்து 90 சதவீத பணி முடிவடைந்தபின்னர் விமான நிலையத்தை தனியார் மயத்திடம் கொடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் தர முடியுமா?
மின்துறை தனியார் மயமாக யார் காரணம்? என்.ஆர். அறிவித்தாரா? மின்துறையில் ஸ்மார்ட் மீட்டருக்கும், புதைவழித்தட கேபிலுக்கும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் அரசு செலவிட்டது. அனைத்துவேலை செயும் செய்து தனியாரிடம் கொடுக்க முயற்சித்து வருகின்றனர்.
1996 திராவிட மாடல் ஆட்சியில் ஒன்லைட் சர்விஸ் அடிப்படையில் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ரூ.10 ஆயிரத்தில் மருத்துவம் படிக்க இடம் கொடுக்கப்பட்டது. எம்பிசி, ஓபிசி இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது. ஆரிய மாடல் ஆட்சியில் முற்பட்ட வகுப்பினருக்கு இடபிள்யூஎஸ் இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை தட்டி பறிக்கின்றீர்கள்.
கவர்னர் முழுக்க, முழுக்க பாஜக அரசியல் செய்கின்றார். அவர் பாஜகவிற்கு தலைவராக வந்துவிடலாம். ஆளுநர் நிலையை தாண்டி அரசியல் செய்வது ஏற்புடையதல்ல.
புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய பாடுபடுவோம். உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் செய்தார், வெற்றியில் அவருக்கும் பங்கு உள்ளது. சேப்பாக்கத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். சட்டமன்ற உறுப்பினராக தேர்வான யாரும் அமைச்சராகலாம். தலைவர் தளபதியார் புதுச்சேரி மக்கள் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். புதுச்சேரி முதல்வர், தமிழக முதல்வரை சந்தித்தால் நிச்சயம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *