தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் 33 வார்டுகள் உள்ளன. நாளுக்கு நாள் மக்கள் பெருக்கத்தை அடுத்து நகரம் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகின்றன. இதன்படி நகரின் இதய பகுதியான வேலப்பர் கோவில் தெருவில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது

இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இது குறித்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது இதன்படி நேற்று கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறும் போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *