கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் திவ்யா வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
கரூர் தாந்தோணி கிழக்கு ஒன்றிய பகுதியில் கொசமேடு, மேலப்பாளையம், நத்தமேடு,சணப்பிரட்டி வடக்கு பாளையம் என பல பகுதிகள் வீடு, வீடாக சென்று அதிமுக வின் சாதனைகளை கூறி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார்.கடந்த 2011 ஆண்டில் அதிமுக ஆட்சியில் 2016 அதிமுக ஆட்சியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றப்பட்டது
அம்மா உணவகம், அம்மா குடிநீர், தாலிக்கு தங்கம் 8 கிராம், மடிக்கணினி, பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போன்ற திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சி காலத்தில் இருந்தது ஆனால் இன்று இருக்கும் திமுக ஆட்சி பொறுத்தவரை பட்டப் பகலில் பாலியல் தொந்தரவு கஞ்சா, இரவு நேரத்தில் மது விற்பனை போன்ற பொதுமக்களுக்கு தீமைகளை விளைவிக்கும் வகையில் மட்டும் தான் ஆட்சி செய்து வருகின்றது.
2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைய வேண்டும்.இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் உங்கள் வீட்டு டாக்டர் நான் எப்பொழுதும் உங்களுக்காக ஓடோடி வருவேன் என்று தேர்தல் பரப்புரையில் பேசினார்.அதேபோல் இந்தவடக்குபாளையம் பகுதியில் சாலை, குடிநீர்,சாக்கடை வசதி, என பல்வேறு குறைகள் உள்ளன. திமுக ஆட்சியில் இங்கு இருந்த எம்.எல்.ஏ குறைகளை கேட்டு தீர்க்கவில்லை,நேரில் வந்து பார்க்கவும்,நன்றி சொல்லவும் இல்லை ஆனால் தற்போது எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் தேவைகள்அனைத்தும் செய்துகொடுக்கிறேன் என்று கூறினார்.உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலர் ஆராத்தி எடுத்தும், மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.