சென்னை திருவொற்றியூரில் உயர் மின்னழுத்தத்தின் காரணமாக வீட்டிலிருந்த டிவி வெடித்து, பேன்கள் பழுது ஏற்பட்டதால் மின்வாரிய அதிகாரியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியில் உள்ள அண்ணா காலனி உள்ளது.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக தொடர் மின்வெட்டு காரணமாக குடியிருப்பு வாசிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர் இதனையடுத்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது மின் இணைப்பு சரி செய்தனர்
இதனை அடுத்து இன்று உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு வீட்டில் உள்ள டிவி மின்விசிறிகள் வெடித்தாக கூறப்படுகிறது இதனால் இரவில் மின்சாரம் இல்லமால் அவதிப்பட்ட குடியிருப்பு வாசிகள் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர்க்கு போன் செய்த உரிய பதில் அளிக்காததால் அத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள் 50க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் தெற்கு மாட வீதி சாலையில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.
மின்சார துறை அதிகாரிகளிடம் பேசி சரி செய்வதாக பொதுமக்களிடம் காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தனியரசு குடியிருப்பு வாசிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி மின்சார வாரி அதிகாரியை தொடர்ப்பு கொண்டு பின்னர் புதிய மின் கேபிள் வரவழைக்கப்பட்டு புதிய மின் இணைப்பு கேபிள் மாற்றி மின் இணைப்பு கொடுக்கும் பணியை மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்