நீடாமங்கலம்., ஏப்ரல்.19

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மன்னார்குடி வேட்பாளர் எஸ்.காமராஜ் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அண்ணாமலை பேசுகையில்… வேட்பாளர் எஸ்.காமராஜ் கடந்த 2021 இதே தொகுதி போட்டியிட்டவர்.

அப்போது அதிமுக, அமமுக சேர்ந்து பெற்ற வாக்கு 90260, அப்போது இந்த கூட்டணி இருந்திருந்தால் இந்த கூட்டணி டி.ஆர்.பி.ராஜாவை விட 3088 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பார். டி.ஆர்.பாலுவுக்கு எதிரான வழக்குகில் நானே வாதாடினேன். அப்போது கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெரியாது என பதில் சொன்னார்.

நீங்கள் வாசித்துள்ள ஊரில் வடசேரி 2010, ஏப்ரல் 9ம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி தடியடி நடத்தி அப்பகுதி மக்கள் ஏப்ரல் 9ம் தேதி கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். டி.ஆர்.பாலு அன்று வந்த வால்வோ கார் & சாராய ஆலயத்தின் பெயரில் உள்ளது.

டி.ஆர்.பாலு ஆணவம், அகங்காரம் கொண்டவர், அதைவிட இரண்டு மடங்கு ஆணவம், அகங்காரம் உள்ளவர் டி.ஆர்.பி.ராஜா. தமிழ்நாட்டிற்கு இது கொண்டு வந்தேன், இது கொண்டு வந்தேன் என சொன்ன டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடிக்கு என்ன கொண்டு வந்தார். 3 ஆயிரம் ஏக்கரில் ஜவுளி பூங்கா கொண்டு வருவேன் என கூறி வருகிறார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஜவுளி பூங்கா கொண்டு வந்தால் கழிவு நீர் எங்கு செல்லும், 1பாட்டில் பீர் தயாரிக்க 180 லிட்டர் தண்ணீர் வேண்டும் மீண்டும் அந்த அசுத்தமான தண்ணீரை நிலத்தடியில் பாய்ச்சப்பட்டு இப்பகுதியில் நிலத்தடி நீர், உப்பு தன்மையை அதிகரித்து விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

நீங்கள் கமிஷன் பெறுவதற்காக ஏன் இங்கு தொழிற்சாலை கொண்டுவரவேண்டும். மன்னார்குடி தப்பிக்க வேண்டும் என்றால் டி.ஆர்.பி.ராஜாவை சரித்திர வாக்கு வித்தியாசத்தில் தோற்ற கடிக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தவர்கள், கோயம்புத்தூரில் சிப்காட் கொண்டு வந்து அப்பகுதி மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார்கள் . கோயம்புத்தூர், டெல்டா பகுதியில் உள்ள தண்ணீரை சூரையாடவே , இப்பகுதியில் சாராய ஆலை, சாயப்பட்டறை கொண்டு வருகிறார்கள்.

திமுக 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மன்னார்குடி விவசாயம் சார்ந்த தொழில் அமைப்போம், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வேளாண் கல்லூரி, நீடாமங்கலம் பேருந்து நிலையம் கட்டுவோம் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை.

திருவாரூர் மாவட்டம் 1996ல் இருந்து திமுக வெற்றி, கம்யூனிஸ்ட் மாறி, மாறி வெற்றி பெற்று வருகிறார்கள், இதுவரை எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் உற்பத்தியில் கடைசியில் உள்ளது. மனித வளர்ச்சி குறியீடு கடைசியிலிருந்து 5 வது இடத்தில் உள்ளது.

பிரதமர் மோடி 4 ஆண்டுகளில் யூரியாவிற்காக 29 ஆயிரம் கோடி கொடுத்துள்ளார். ஆனால் யூரியா கேட்டால் அந்த பொருளை வாங்கினால் தான் யூரியா என தெரிவிப்பார்கள். சென்றமுறை உதயநிதி சொன்னார் என கூறி தங்க நகையை 48 லட்சம் பெண்கள் அடகு வைத்து கடன் பெற்றார்கள். இதிலிருந்து 35 லட்சம் பேர் கடனில் இருந்து வெளியில் வரவில்லை.

பாரத பிரதமர் மோடி அவர்கள் மகளிர் மசோதா கொண்டுவந்தார், 33 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு 39ல் எம்பி இருந்து 59 எம்பி. 20 எம்பி பெண்கள், கேரளா, ஆந்திராவிற்கும் கூடுதல் பெண் எம்பிக்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் திமுகவும், காங்கிரஸ் திமுகவில் 2 பெண் எம் பி க்கள் இருக்கிறார்கள்.

கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் புழுதி காட்டில் உள்ள நமது பெண்கள் வாய்ப்பில்லாமல் உட்கார்ந்து இருக்க வேண்டும். ஏப்ரல் 23ம் மகளிர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்த திமுகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருகிறோம். ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு 22 ஆயிரத்து 156 கோடி தள்ளுபடி செய்வோம் என கூறி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஐடி ஊழியர்களை விட 5 மடங்கு உடல் உழைக்க கூடியவர்கள் விவசாயி, ஆனால் மாதம் 10 ஆயிரம் தான் சம்பாதிக்கிறார். அவர்கள் மண்ணில் இருக்க வேண்டிய கட்டாயம், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

எனவே கடன் தள்ளுபடி செய்து அவர்களை இழப்பில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. 2 முறை தோல்வியை தழுவி இருந்தாலும், 10 ஆண்டுகாலம் உங்களுடன் இருந்து பணியாற்றிய எஸ்.காமராஜ் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *