அக்ஷய திதியை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு – குனியமுத்தூரில் யூஎம்டி ராஜாவின் புதுமையான முயற்சி.
வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், கோவை குனியமுத்தூரை சேர்ந்த யூஎம்டி ராஜா புதுமையான விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
அக்ஷய திதி பண்டிகையை மையமாகக் கொண்டு, உப்பு, பருப்பு, அரிசி போன்ற பொருட்களை செம்பில் வைத்து, அதன் மீது தேங்காய் மற்றும் மா இலைகளை அலங்கரித்து, அவற்றில் ஓட்டு முத்திரைகளை வரைந்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
மேலும், தேங்காயிலும் ஓட்டு முத்திரை சின்னம் வரையப்பட்டுள்ளதுடன், “100% வாக்கு பெருகட்டும், நல்லாட்சி அமையட்டும்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
இதனுடன், தேர்தல் சின்னம், வாக்களித்ததை குறிக்கும் விரலில் மை அடையாளம் போன்ற உருவங்களையும் காட்சிப்படுத்தி, பொதுமக்களுக்கு வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் தினத்தையும் குறிப்பிட்டு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விதமான பாரம்பரியம் மற்றும் சமூக பொறுப்பை இணைக்கும் முயற்சி, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.