கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கை ஆதரித்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வால்பாறை நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முன்னதாக அதிமுக, பாஜக, அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து நகர்பகுதியில் தீவிர வாக்கு சேகரித்தார்

அப்போது தமிழகத்தில் எடப்பாடியாரின் நல்லாட்சி அடைந்தவுடன் வால்பாறையில் சொந்த வீடில்லாத தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர வீடு கட்டிக் கொடுக்கப்படும், தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்வு செய்யப்படும், மார்க்கெட் பகுதி வியாபாரிகளுடன் கலந்து பேசி உரிய தீர்வு காணப்படும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி கஞ்சா உள்ளிட்ட போதைபொருள் இல்லா தமிழகம் அமையவும் எடப்பாடி யாரின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் டி.லட்சுமணசிங்கை வெற்றிபெற செய்யவேண்டும் என்று வாக்கு சேகரித்தார்

இந்த வாக்கு சேகரிப்பின் போது நகரச்செயலாளர் மயில் கணேசன், தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ.அமீது, மேற்கு நகர பொறுப்பாளர் சலாவுதீன்அமீது, பாஜக மாவட்ட தலைவர் சந்திர சேகர், அதிமுக நகர துணைச் செயலாளர் எஸ்.பொன் கணேசன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் கே.எம்.தங்கவேல், மண்டல தலைவர் செந்தில்முருகன், அமமுக தொழிற்சங்க மாநில செயலாளர் கே.எம்.குஞ்சாலி, நகரச்செயலாளர் நெல்லை செல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *