திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 2301 வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 25000 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் மும்முறமாக ஈடுபட்டு, சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஒரு வாக்கு சாவடியில் வாக்காளர் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களின் நலனுக்காகவும் முதல் தலைமுறை வாக்காளர்கள் எளிதில் அறிந்து கொள்ளவும்,செயல்முறை வீடியோ திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நமது வாக்கு நமது உரிமை 100% சதவீதம் வாக்களிப்போம் என தெரிவித்துள்ளார்.