கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை வலதுகரை பகுதியில் உள்ள சோலையாறு நகரில் காணாமல் போன மூதாட்டி இன்னாசியம்மாள் வயது 80 என்பவரை தாக்கிய விலங்கு எது என்று அறிய தடயங்களை கண்டறிய வனத்துறையினர் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்க் கொண்டு வந்தனர் இந்நிலையில் மூதாட்டியை தாக்கி கொன்றது சிறுத்தை என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர் மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
20.04.2026