தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகின்றனர். கடன் வாங்குவதில் மட்டுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா பேட்டி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நல்ல பருவமழை கொடுத்திருக்கிறது. ஆனால் எல்லாவற்றிலும் தோல்வியடைந்த இந்த திராவிட மாடல் அரசு சென்னையில் மட்டும் மத்திய அரசு வழங்கிய பேரிடர் மேலாண்மை நிதி நான்காயிரம் கோடி ரூபாயை வழங்கி உள்ளது. அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கே என் நேரு அவர்கள் 95 சதவீத நிதியை செலவு செய்து விட்டோம் என தெரிவித்தார்.ஆனால் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து கேட்ட பின்னர் 40 சதவீதம் தான் பணிகள் நடைபெற்று உள்ளது என தெரிவித்தார். மத்திய அரசு பணம் கொடுத்தும் தற்பொழுது சென்னை மிதந்து கொண்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது வேளாண்துறை அமைச்சர் சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது தான் காரணம் என தெரிவிக்கிறார். நெல் ஒரு நாளில் விளைந்து விடாது விதை விடும் பொழுது பரப்பளவு அதிகரிப்பு குறித்து தெரிந்திருக்க வேண்டும் அறுவடை செய்வதற்கு 110 நாட்களாகும் அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு என்ன செய்தது அறுவடை செய்து நெல்லை ஏன்? கொள்முதல் செய்யவில்லை. ஸ்டாலின் அரசு ஒரு தோல்வி அடைந்த அரசு மோசமான ஒரு அரசாங்கம் மக்கள் விரோத அரசாங்கம்.
அருகே உள்ள ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் 1.33 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் தொழில்நுட்பக்கூடம் அமைகிறது.கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்கள் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகின்றன ஆனால் இங்குள்ள அரசாங்கமோ மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை.
குறிப்பாக பட்டியல் சமூக மக்களுக்காக வழங்கப்பட்ட 10,000 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். ஆகவே ஒரு செயல்படாத அரசு உள்ளதால் இன்று நெல் முளைத்துள்ளது. இந்த நான்கரை ஆண்டு காலத்தில் நெல் கொள்முதல் செய்யும் போது அதனை பாதுகாப்பதற்கு தற்காலிக கிடங்குகள் கூட உங்களால் அமைக்க முடியவில்லை ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள் ஆட்சியை விட்டு ஓடி விட வேண்டியது தானே வரும் 2026 தேர்தலில் மக்களே உங்களை அடித்து விரட்டுவார்கள் எல்லா விதத்திலும் மக்களை ஏமாற்றிய தோற்றுப்போன அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம்.
இன்றைக்கு அறுவடை செய்த நெல்லை வைக்க விவசாயிக்கு இடமில்லை
நீங்கள் கொள்முதல் செய்த நெல்லின் நிலையோ முளைத்துப்போய்விட்டது
உங்களுக்கு நெல்லுக்கான தொகையை கொடுப்பது இந்திய உணவு கழகம் அந்த நெல்லை பாதுகாத்து வைப்பதுதானே உங்க வேலை. நீங்க பணம் கொடுகலையே.விவசாயிக்கு அவர்கள்தானே பணம் கொடுக்கிறார்கள் நீங்க ஏன் அதை செய்யவில்லை. கௌரவம் இருந்தால் ஸ்டாலின் பதவியை ராஜினாமா செய்வார் இல்லை என்றாலும் மக்களே அதை செய்வார்கள்
நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதற்கு மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு?
மத்திய அரசு என்ன இவர்களது கையை பிடித்து இழுத்து வைத்திருக்கிறதா? கொள்முதல் செய்து நெல் மூட்டைகளை பாதுகாக்க போதிய வசதிகள் இவர்களிடம் இல்லை அதை மறைப்பதற்கு பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் திமுக என்றாலே கொலை, கொள்ளை,கற்பழிப்பு, பொய் என்பதுதான்
மற்ற மாநிலங்கள் முதலீடுகளை அதிகமாக இழுத்து வருகின்றன தமிழகத்தில் பாக்ஸ்கான் 15000 கோடி முதலீடு செய்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள் ஆனால் அந்த நிறுவனமே சொல்கிறது நாங்கள் அப்படி ஒரு ஒப்பந்தம் செய்யவில்லை என ஆகவே இவர்கள் சொல்வது அனைத்தும் பொய்தான்.
ஸ்டாலின் அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து 6700 கொலைகள் நடைபெற்று உள்ளது ஆளத் தெரியாத துப்பு கெட்ட மக்கள் விரோத அரசு திமுக அரசு.
வருவாய் நீட்டுவதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது தமிழகம் கடன் வாங்குவதில் தான் முதலிடத்தில் உள்ளது
நடப்பு நிதியாண்டில் இந்த அரசாங்கம் வாங்கும் கடன் அல்லது வாங்க திட்டமிட்டுள்ள கடன் தொகையானது 97 ஆயிரம் கோடி. இதில் அரசின் மூலதன செலவு 57 ஆயிரம் கோடி எஞ்சிய 40 ஆயிரம் கோடி என்ன செய்யப் போகிறீர்கள்? யார் வீட்டுக்கு செல்ல போகிறது தேவா வேலு வீட்டுக்கா அல்லது செந்தில் பாலாஜி வீட்டுக்கு செல்கிறதா தெளிவான வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்
நான்காண்டுகள் முதலமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் வெள்ளையருக்கை கேட்கிறார் இவர்கள் வெறும் வெள்ளை பேப்பரை கொடுத்து சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் மிகவும் அகங்காரத்தோடும் ஆணவத்தோடும் இருக்கிறார்கள்
வேளாண் துறை அமைச்சர் சொல்கிறார் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது என அதற்கு ஏற்ப முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன் அதேபோல் முன்பெல்லாம் தனியார் வியாபாரிகள் நெல்லை வாங்குவார்கள் இந்த முறை வாங்கவில்லை அதனால் அதிக நெல் முட்டைகள் உள்ளது என்கிறார் தனியார் வியாபாரிகள் நெல்லை வாங்குவார்கள் என்றால் இதற்கு ஏன் அரசாங்கம் தேவைப்படுகிறது.
கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் ஏனென்றால் இவர்கள் காவல்துறை வழங்கிய இடத்தில் தான் விஜய் கூட்டத்தை நடத்தியுள்ளார் குறிப்பாக சம்பவம் குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போதே பொய்யான தகவலை பேசியுள்ளார் மாலை 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விஜய் 7:30 மணிக்கு வந்துள்ளார் ஆகவே பத்து மணிக்கு மேல் அவர் வந்து இருந்தால் தான் அது தவறும் தாமதமும் ஆகும் சரியான நேரத்திற்கே அவர் வந்துள்ளார் ஆனால் உரிய முன்னேறுபாடுகளை செய்ய தவறியது அரசுதான் என குற்றம் சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியது போல் இவர்கள் உருட்டுக்கடை அல்வா அரசுதான் எனவும் தெரிவித்தார் மேலும் உடனடியாக அறுவடை செய்த விவசாயிகளிடம் இருந்து நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்
பேட்டி எச். ராஜா, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர். வைத்தீஸ்வரன் கோவில்
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
