மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தில்லையம்மாள் (65) தனது மகள் மற்றும் இரண்டு பேர்த்திகளுடன் சேதம் அடைந்திருந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார் இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு செய்த மழை மற்றும் காற்றில் அந்த குடிசை வீடு முற்றிலும் சரிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டது
இதனால் மன வேதனை அடைந்த மூதாட்டி தார்ப்பாய் அமைத்து பிரிய குடிலில் இருந்து வந்தார் மகள் மற்றும் இரண்டு பேத்திகளை வைத்துக்கொண்டு வீட்டில் அமரக்கூட இடம் இடமில்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் மிகுந்த சிரமத்துடன் வசித்தார். விவசாயக் கூலி வேலைக்கு செல்லும் மூதாட்டியால் வீட்டை சீரமைக்க முடியாத வறுமை நிலை குறித்து கிராம மக்கள் மூலம் அறிந்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பாரதிமோகன், மூதாட்டிக்கு உதவிட முன்வந்தார்.
மூதாட்டியின் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் பாரதிமோகன் தனது நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் ருபாய் 3 லட்சம் மதிப்பில் பாதுகாப்பான வீடு கட்டும் பணி கடந்த மாதம் துவங்கப்பட்டது.அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை மூதாட்டியை வைத்து திறப்பு விழா செய்து இன்று அவர்களிடம் ஒப்படைத்தார்.
மூதாட்டி மற்றும் அவரது மகள் மற்றும் பேத்திகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, மளிகை பொருட்களையும் வழங்கினார்.விழாவிற்கு தேவையான காலை உணவுகளையும் தயார் செய்து சமூக சேவகர் விழா தொடர்ந்து கிராம மக்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
விழாவில் கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். மூதாட்டிக்கு குடும்பத்தினருக்கு சமூக வலைதள நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு பாதுகாப்பான வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர் பாரதி மோகனுக்கு கிராம மக்கள் மற்றும் மூதாட்டி குடும்பத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.