கடலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகரக் குழு தோழர் ஜெயராஜ் தலைமையில் மாநகர செயலாளர் தொடர் நாகராஜ், வட்டச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் மாநகரக் குழு கூட்டம் நடைபெற்றது.குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தோழர் துரை பங்கேற்று கட்சியின் வளர்ச்சி செயல்பாடு போன்றவற்றை விவாதித்து பேருரையாற்றினார்.
மாவட்ட குழு தோழர் குளோப், சிவக்குமார், ஹரி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் கலந்துகொண்டனர் இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் கடலூர் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் மாநகரத் துணைச் செயலாளராக தோழர்.எம்.ஜே லெனின் (வழக்குரைஞர்) மாநகரப் பொருளாளராக தோழர்.சி கே ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் இறுதியாக மாநகரக் குழு தோழர் ஹரிகரன் நன்றி கூறினார்.