துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் உள்ள உழவர் சந்தை திடலில்”உழவர் சந்தை”
துவக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இன்று (12-11-2025) வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தமிழக விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கனிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து விவசாயிகள் முன்னேற்றம் அடையும் வகையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதி 14 -11 -1999ந் தேதி மதுரை அண்ணா நகரில் முதல் “உழவர் சந்தை” யை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் துறையூரில் 12 -11 -2000 அன்று உழவர் சந்தை துவக்கப்பட்டது. வேளாண் துணை இயக்குநர் சொர்ணபாரதி தலைமையில் உழவர் சந்தை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் துறையூர் சட்ட மன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார் கலந்து கொண்டு நலத்திட்டங்கள் வழங்கினார். விழாவில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை,சிவ சரவணன்,முன்னாள் கவுன்சிலர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை துணை அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி அலுவலர்கள் குணா, பொன்மணி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள்,சுய உதவி குழுவினர்,திமுக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்