திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் கடந்த சில நாட்களாக வாழைத்தார்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. பொதுவாக ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் வாழைத்தார்கள் வரும் நிலையில், தற்போது 15 ஆயிரம் வாழைத்தார்கள் வந்துள்ளன. இதனால் விற்பனை குறைந்து, வாழைத்தார்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மண்ணை
க. மாரிமுத்து.