கோவையில் ஏழு அடி உயரம் நான்கு அடி அகலத்தில் பிரம்மாண்ட தஞ்சாவூர் ஓவியம் வரைந்து உலக சாதனை ஒன்பது மணி நேரத்தில் 17 ஓவியர்கள் தங்க இலைகள், பட்டைத்தீட்டப்பட்ட கற்கள் மற்றும் துடிப்பான வண்ணங்களைப் பயன்படுத்தி உருவாக்கி அசத்தல் சர்வதேச அளவில் தனி சிறப்பை பெற்றுள்ள தஞ்சை ஓவியங்கள் தஞ்சாவூர் பலகை படம் என அழைக்கபடுகிறது..
பலா அல்லது தேக்கு மரப்பலகைகளில் வரையப்படும் தென்னிந்திய பாரம்பரிய ஓவியமாக அறியப்படும் தஞ்சாவூர் ஓவியங்கள் , சோழர் காலம் துவங்கி தலைமுறைகள் பல கடந்தும், நவீனங்களை புகுத்தி தற்போதும் அதே உயிர்ப்புடன் இருக்கிறது.
இந்நிலையில் தஞ்சை ஓவியங்களின் தனி சிறப்பை கூறும் விதமாக கோவையில் ஏழு அடி உயரம் மற்றும் நான்கு அடி அகலத்தில் பிரம்மாண்ட தத்ரூப பலகை படமாக பழங்கால ஓவியமாக திருப்பதி பாலாஜி படத்தை ஒன்பது மணி நேரத்தில் வரைந்து உலக சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது..
மை அங்காடி.காம் (My Angadi.Com) நிறுவனத்தின் பதினேழு ஓவியர்கள் மற்றும் ஏழு உதவியாளர்களுடன் உறுதியான மரப்பலகைகள்,பழங்கால முறைப்படி சுண்ணாம்பு கலவை, மற்றும் தங்கத் தகடுகள் பயன்படுத்தப்பட்டு, பட்டைத்தீட்டப்பட்ட கற்கள் மற்றும் துடிப்பான வண்ணங்களைப் பயன்படுத்தி,அதி வேகமாக உருவாக்கிய ‘பலகை படம்’ எனும் தஞ்சை ஓவியம் யூனியன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..
இது குறித்து மை அங்காடி.காம் (My Angadi.com) நிறுவனர் இளவரசி கூறுகையில்,சோழர் காலம் துவங்கி பல்வேறு கலைகளில் தமிழர்கள் சிறந்து விளங்கிய நிலையில்,சர்வதேச அளவில் பிரபலமான தஞ்சை ஓவியங்கள் வரைவதிலும் தமிழர்களின் பங்கு இருப்பது குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த உலக சாதனை நிகழ்வை நடத்தி உள்ளதாக தெரிவித்தார்…
நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் தன்மை கொண்ட இந்த ஓவியங்கள் வரைய பல நாட்கள் ஆகும் நிலையில் ஒன்பது மணி நேரத்தில் கோவையில் உருவாக்கிய தஞ்சை புகழ் திருப்பதி பாலாஜி ஓவியம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது…