கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டிக்கு சிறந்த மஹல்லா விருது முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழக முதல்வர் வழங்கல்
தேனி மாவட்டம் கம்பம் வாவேர் பள்ளி வாசல் ஜமாஅத் கமிட்டிக்கு கும்பகோணத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் சிறந்த மஹல்லா விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் கும்பகோணத்தில் தமிழ் நாடு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழ் நாட்டில் சிறந்த பள்ளிவாசல் ஜமாஅத்களுக்கு சிறந்த மஹல்லா விருது வழங்கினார்
இதில் தேனி மாவட்டம் கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டிக்கு சிறந்த மஹல்லா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி மற்றும் இந்திய முஸ்லிம் லீக் நிர்வாகிகள்
கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி செயலாளர் நாகூர் மீரான் துணை செயலாளர் அப்துல் காதர் உறுப்பினர்கள் ஜியாவுதீன், ஆசிக் ரகுமான் அம்ஜத் கான் ,ஜியாவுதீன் மற்றும் நிர்வாகிகளிடம் வழங்கினார்.