அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார் டிட்வா புயலால் அரியலூரில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு காலதாமதம் இன்றி நிவாரணம் வழங்க வேண்டும் அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தும் 80 சதவீத ஏரி குளங்களில் தண்ணீர் இல்லை இந்த ஏரிகளை சிமென்ட் ஆலைகளின் கனிம நிதியை கொண்டு தூர்வாரி புனரமைக்க வேண்டும் விவசாய பயிர் கடன் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் கொடுக்க பணம் இல்லை என்கின்றனர் உரிய நேரத்தில் பயிர் கடனும் நகை கடனும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதையே கோரிக்கை மனுவாக மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் மனுவாக வழங்கினார் பின்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் சின்னப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் அரியலூர் ஒன்றிய தலைவர் அறிவழகன் செந்துறை ஒன்றிய தலைவர் சிவலிங்கம் செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளவரசன் குடிசல் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *